ஐபிஎல்: பஞ்சாப் அணி வெற்றி – ஹாட்ரிக் தோல்வியைத் தழுவிய சென்னை!

entertainment

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்டோபர் 7) துபாயில் நடைபெற்ற 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே டெல்லி, ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த சென்னை அணி, தற்போது பஞ்சாப்பிடம் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கெய்க்வாட் 12, மொயீன் அலி 0, அம்பதி ராயுடு 4, ராபித் உத்தப்பா 2, டோனி 12 என சென்னை அணி வரிசை கட்டி விக்கெட்டுகளை இழந்தது. 12 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டூ பிளெசிஸ் அரை சதம் அடித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கே.எல்.ராகுல். ஒருபுறம் மயங்க் அகர்வால் (12), சர்பராஸ் கான் (0), ஷாருக்கான் (8), மார்க்ரம் (13) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் கே.எல்.ராகுல் தனி ஆளாக அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களை விளாசிய கே.எல்.ராகுல் 98 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 13 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஏற்கெனவே டெல்லி, ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த சென்னை அணி, தற்போது பஞ்சாப்பிடம் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்துள்ளது.

கிட்டத்தட்ட பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்திருந்த பஞ்சாப் அணிக்கு, நேற்றைய வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *