அவரு வாய்க்கு சக்கரைதான் போடணும்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இன்னிக்கு காலையில பள்ளிக் கல்வித் துறை அமைச்சரு செங்கோட்டையன், ‘பள்ளிகள் திறக்க சாத்தியக் கூறே இல்லை’னு அடிச்சு சொன்னப்பவே ஸ்கூல் விசயத்துல இந்த மனுஷன் சொன்னா அதுக்கு எதிராகதானே நடக்கும்னு லைட்டா பொறி தட்டுச்சு. சாயந்தரமே சாச்சுப்புட்டாங்க. அவர் வாய்க்கு சக்கரைதான் போடணும். ஸ்கூலெல்லாம் நவம்பர் 16 லேர்ந்து திறப்பாங்களாம். செங்கோட்டையன் சார்… எங்க உங்க வாயால பள்ளிகள் திறக்கப்படும்னு சொல்லுங்க பாக்கலாம், அப்பதான திறக்க மாட்டாங்கனு ஒரு சின்னப்பொண்ணு கேம் விளையாடிக்கிட்டே சொல்லுது. என்னத்த சொல்ல…

நீங்க அப்டேட் பாருங்க

**நாகராஜ சோழன்MA.MLA**

நாட்டின் நலன் கருதி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு

எதிர்கட்சி அரசியல் செய்யாம, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டி இட்லியா செய்வாங்க…

**தர்மஅடி தர்மலிங்கம்**

விருப்ப ஓய்வில் ஓய்வு பெறும் அதிகாரிகள் பெரும்பாலும் விருப்பம் இல்லாமலே ஓய்வு பெறுகிறார்கள்.!

**???????????????????????????????????????????????????? ????????????????™***

கவர், பவர், டவர் என மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னால் கடமை முடிந்திருக்கும்.

#மொபைல்

**PrabuG**

பஸ்ல ஏறும் பொழுது நடுவுல எங்கேயும் நிற்காது நேரா சென்னைதான்னு சொல்வாங்க.

நம்பாதீங்க…

**Madurai Jinna**

மோடி டி-சர்ட் போட்டா., இதுதான் வாசகமா இருக்கும்

“கேமராவ மறைக்காத

போடா.!”

**நட்சத்திரா**

காதோடு காதாக அமைதியாக பேசினால் புது ஜோடி..

ஊருக்கே கேக்குற மாதிரி பேசினால் பழைய ஜோடி…

**ச ப் பா ணி**

எல்லா பட்டாசு கடைகளிலும் உள்ள ஒரே வாசகம் “இங்கு சிவகாசி விலைக்கே கிடைக்கும்”

**தர்மஅடி தர்மலிங்கம்**

எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய நோய்கள் அடிக்கடி வரும் – ஐ.நா அறிவியல் கொள்கைக்குழு!

உங்க வாயிலெல்லாம் நல்ல வார்த்தையே வராதா..

**மயக்குநன்**

சசிகலா விரைவில் வெளியே வருவார்!- திவாகரன்.

இன்னும் தீபாவளி ஷாப்பிங் முடியலியா அண்ணே..?!

**லாக் ஆப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel