d’பீஸ்ட்’ முதல் பாடல் எப்போது வெளியீடு?

Published On:

| By Balaji

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’.

கதாநாயகியாக பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் செல்வ ராகவன் நடிக்கிறார்.

படத்திற்கு இசை அனிருத். இதில் விஜய், பூஜா ஹெக்டேவிற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கதையின் மற்ற பகுதிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ‘பீஸ்ட்’

‘100வது நாள் படப்பிடிப்பு’ எனப் படப்பிடிப்பில் விஜய், நெல்சன், பூஜா, கிங்ஸ்லே உள்ளிட்ட அனைவரும் இருக்கும்படியான சிறப்புப் புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தைக் கோடை விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. கோவிட் சூழ்நிலையைப் பொறுத்துப் பட வெளியீடு தள்ளிப் போகவும் அதிகம் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் புது புதுவருடம், பொங்கல் விடுமுறை தினத்தை ‘பீஸ்ட்’ அப்டேட்டை’ எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது தள்ளிப்போயுள்ள நிலையில் தற்போது ஜனவரி 26 அன்று படத்தின் அப்டேட் போஸ்டர் வெளியாகும் எனவும் படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியுள்ள பாடல் அடுத்த மாதம் காதலர் தினத்தன்று அதாவது பிப்ரவரி 14ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

**ஆதிரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share