“விசாரணை அமைப்புகள் எப்போது அழைத்தாலும், நான் அதற்கு தயாராகவே இருக்கிறேன்” என்று அமீர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தின் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கிறார்.
ஜாபருடன் தொடர்புபடுத்தி அமீர் குறித்து செய்தி வெளியான நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், ”சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் அமீர்.
அதில், “என்னுடைய இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டேன்.
எனினும் தொடர்ந்து சில ஊடகங்களில் குற்றச்செயல்களோடு என்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிடுவதை பார்க்க முடிகிறது.
Ameer releaed a Video regarding Jaffer’s Drug Case Issue.
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 1, 2024
மது, விபச்சாரம், வட்டி ஆகிய சித்தாந்தங்களுக்கு எதிரான மார்க்கத்தை பின்பற்றுபவன் நான். இது போன்ற குற்றச்செயலில் தொடர்புபடுத்திப் பேசுவது என்பது எனது பெயருக்கு களங்கத்தையும், எனது குடும்பத்துக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே என்பதை தவிர வேறு எந்த பலனும் கிடையாது.
ஊடகங்கள் என்னை தொடர்புபடுத்தி பேசும் குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு விசாரணை அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் என்னை எப்போது அழைத்தாலும், நான் தயாராகவே இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து… இதுதான் பின்னணி!
சட்டென உயர்ந்த தங்கம்… 1 கிராம் விலை இதுதான்!