சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 1) ஒரு சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 25 அதிகரித்து ரூ.5,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 216 அதிகரித்து ரூ.50,968-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6371-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.50 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 76.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் சிறிதளவு உயர்ந்திருந்த தங்கத்தின் விலை இன்று சட்டென ஜம்ப் அடித்து 47,000 -த்தை நெருங்கி வருகிறது. வரும் வெள்ளி விலையும் கிராமிற்கு 5௦ பைசா அதிகரித்துள்ளது.
எனவே தங்கம் வாங்குபவர்கள் சற்று காத்திருந்து நகைகளை வாங்குவது நல்லது. வெள்ளி விலையில் அதிக மாற்றமில்லை என்பதால், வெள்ளிப்பொருட்கள் வாங்குபவர்கள் பெரிதாக யோசிக்க வேண்டிய தேவையில்லை.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலின் பிறந்தநாள் : மோடி, கார்கே வாழ்த்து!
பொறுத்தது போதும்… எடப்பாடிக்கு அமித் ஷா இறுதி கெடு!