தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ,அடுத்த பட வெளியீட்டிற்கு பா.ரஞ்சித் தயாராகி விட்டார்.
பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெ பேபி’ திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது.
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது.
அந்த நிலையில் ‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜெ பேபி’ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் சிறப்பாக பாராட்டியுள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் சுரேஷ் மாரி, ”குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம்”, என தெரிவித்து இருக்கிறார்.
–ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓடிடி-யில் வெளியாகும் ‘ப்ளூ ஸ்டார்’ வெளியீட்டு தேதி இதுதான்!
மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் காங்கிரசுக்கு நிதி கேட்டு ஸ்டிக்கர்!
சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடையிலான… 2-ம் கட்ட மெட்ரோ திட்டப்பணி எப்போது தொடங்கும்?
ஸ்டிக்கர் ஒட்டுவது யார்?: மோடிக்கு கனிமொழி கேள்வி!