இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா வெளியேறிய நிலையில் தற்போது வீட்டிற்குள் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மாயா, பூர்ணிமா, விஷ்ணு, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் உள்ளிட்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இதில் விஷ்ணு இந்த வாரம் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல தினேஷ், அர்ச்சனா, மணி சந்திரா, நிக்ஸன் மற்றும் விசித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
நாமினேட் செய்யப்பட்ட இந்த 5 பேரில் இருந்து நிக்ஸன் அல்லது மணி சந்திரா இருவரில் ஒருவர் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேறலாம்? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால் சென்னை நகரம் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பிக்பாஸ் குறித்து பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பான்மையான மக்களால் வாக்களிக்க இயலவில்லை. அதனால் இந்த வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது,” என அறிவித்துள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் இதற்கு முன்னால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் வாக்குகளின் அடிப்படையில் தான் வெளியேற்றப்பட்டனரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
புயல் பாதிப்பு – சென்னையின் இன்றைய நிலைமை : தலைமை செயலாளர் பேட்டி!
வெள்ளத்தால் உங்கள் கார் சேதமா? மாருதி, மஹேந்திரா, ஆடி கார் நிறுவனங்களின் அறிவிப்பு!