லியோ படப்பிடிப்பு இன்னும் 60 நாட்களில் முடிந்து விடும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் லியோ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் 2வது முறையாக இணைந்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜனவரி மாத இறுதியில் படக்குழு காஷ்மீர் சென்றது. சமீபத்தில் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு லியோ படக்குழு மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் அப்டேட் குறித்துப் பேசியுள்ளார்.
பிஹைண்ட்வுட்ஸ் ‘கோல்ட் ஐகான்’ விருது விழா நேற்று (ஏப்ரல் 1) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சிம்புவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கினார்.
தொடர்ந்து, அவரிடம் லியோ படத்தின் அப்டேட் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களான மணிமேகலை மற்றும் கேபிஒய் பாலா கேள்விகளைக் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த, லோகேஷ் கனகராஜ், “bloddy sweet படத்துல இருக்கும் என்சாய் பண்ணுங்க. லியோ கண்டிப்பா சிறப்பான ஆக்ஷன் படமாக இருக்கும். 60 நாள் ஷூட்டிங் முடிந்துள்ளது. இன்னும் 60 நாள் ஷூட்டிங் தான் இருக்கிறது. படம் முடிந்து விடும்” என்றார்.
இதனால் கூடிய விரைவில் லியோ படத்தைத் திரையில் காணலாம் என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மோனிஷா
அதிமுக – பாஜக கூட்டணி: அண்ணாமலை சொல்வது என்ன?
நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை, வேலுமணி சந்திப்பு: இதுதான் பின்னணி!