‘கங்குவா’ படக்குழு மீண்டும் ஷூட்டிங் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி,ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடொக்ஷன், விஎப்எக்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ‘கங்குவா’ ஓடிடி உரிமையினை அமேசான் நிறுவனம் மிகப்பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில் ‘கங்குவா’ படக்குழு மீண்டும் ஷூட்டிங் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதாவது ‘கங்குவா’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சில காட்சிகளை படத்தில் இணைக்க படக்குழு முடிவெடுத்து உள்ளதாம்.
இதற்காக சூர்யா – பாபி தியோலை வைத்து மூன்று நாட்கள் ஷூட் செய்ய சிறுத்தை சிவா முடிவு செய்ய, இதற்கு பாபி தியோலும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாராம். விரைவில் பார்ட் 2 -விற்கான ஷூட்டிங் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
– இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திர தீர்ப்பை நிறுத்த வேண்டும் : ஜனாதிபதிக்கு கடிதம்!
2024 T20 World Cup: கோலிக்கு இடம் இல்லையா?… ரசிகர்கள் அதிர்ச்சி!