கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த 4 மாதங்கள் கொண்டாட்டமான காலம் தான். வரும் மார்ச் 22 அன்று 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்கவுள்ளது. kohli ruled out of t20 2024
அந்த தொடர் முடிவடைந்த உடனேயே ஜூன் 2 அன்று 2024-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் துவங்கவுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறுவது சந்தேகம் தான் என்ற ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விராட் கோலி விலகினால் நன்றாக இருக்கும் என, இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாம்.
அதுமட்டுமின்றி, 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆடுகளங்கள் பெரும்பாலும் மெதுவானவை.
அந்த ஆடுகளங்கள் கோலியின் ஆட்டத்திற்கு முற்றிலும் எதிர்மறையானது என்பதால், அவரால் இந்த தொடரில் பெரிதும் சோபிக்க முடியாது என்ற காரணத்தாலும், பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில், 6 போட்டிகளில் 98.67 சராசரியுடன் 296 ரன்கள் குவித்தார் கோலி. kohli ruled out of t20 2024
அந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ஆனால், அதன்பின் இந்தியா விளையாடிய இருதரப்பு டி20 தொடர்கள் எதிலும் கோலி பங்கேற்கவில்லை.
இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடினார்.
அந்த தொடரில், கோலியை அதிரடியாக விளையாட அஜித் அகர்கர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. என்றாலும் தொடரின் முதல் போட்டியை தவறவிட்ட கோலி, அடுத்த 2 போட்டிகளில் வெறும் 29 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.
முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகியிருந்தார் கோலி.
தற்போது மார்ச் 22 அன்று முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக பெங்களூர் விளையாடவுள்ள நிலையில், இன்னும் பயிற்சிக்காக கோலி அணியுடன் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
SK : விஜய் இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்?
கொடநாடு வழக்கை விசாரித்த ஐஜி பணியிடமாற்றம்!