இலங்கை கிரிக்கெட் வீரரும் தமிழருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முத்தையா முரளிதரன் 800 என பெயரிடப்பட்ட அந்த படத்தில் முரளிதரனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அறிவிப்பு வெளியானது முதல் தமிழ்நாட்டில் தமிழ் அமைப்புகள் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதா பாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா விஜய் சேதுபதிக்கு பகிரங்க கடிதம் எழுதினார்.
அதில் ஈழ தமிழர் போராட்டத்தை குறிப்பிட்டு அதற்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிப்பது தமிழர்களுக்கு துரோகமிழைப்பதாகும். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார். விமர்சனம், வேண்டுகோள் எதற்கும் பதில் சொல்லாமல் மெளனம் காத்துவந்தார் விஜய் சேதுபதி.
ஒரு நடிகனாக அந்தப் படத்தில் ஒப்புக் கொண்ட அடிப்படையில் விஜய் சேதுபதி உறுதியாக இருந்தார் என்பதை அவரது வட்டாரம் அப்போது உறுதிப்படுத்தினார்கள்.
தமிழகத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள், கண்டனங்களை பார்த்த முத்தையா முரளிதரன் தனது வரலாற்று படத்தில் நடிப்பதில் இருந்து விலகி கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பின்னரே விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார். தற்போது அந்தப்படம் பற்றிய அறிவிப்பை முத்தையா முரளிதரன் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் ( ஏப்ரல் 17) தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதில் முத்தையா முரளிதரன் ஆக ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து பிரபலமான இந்தி நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக நடித்து வருகிறார்.
மஹிமா நம்பியார், நாசர், நரேன், வேலராமமூர்த்தி, வடிவுக்கரசி, அருள்தாஸ், ரித்விகா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.
‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீபதி, ‘800’ படத்தை இயக்குகிறார்.
ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே எல் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் உடன், விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரித்துள்ளார்.
இராமானுஜம்
பாரம்பரிய தினம்: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம்!
இந்தியாவில் முதன்முறையாக தண்ணீருக்கு தனி பட்ஜெட்!
பிராவோ இல்லாம கஷ்டமா இருக்கு! – ஆர். சி. பி போட்டிக்கு பின் தோனி