உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 18) மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள புராதன சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய தினம் ஏப்ரல் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒரு நாட்டில் உள்ள புராதன சின்னங்கள் வாயிலாக அங்கு வசித்த மக்களின் பழக்கவழக்கங்களையும், நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள முடியம். எனவே புராதனசின்னங்களை பேணி காப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
இந்தநிலையில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடற்கரை கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 440 புராதன சின்னங்கள் உள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கோவிலுக்கு அதிகளவில் வருகை தருவார்கள்.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு கடற்கரை கோவிலில் உள்ள ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை நுழைவு கட்டணமின்றி பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிடுவதற்காக உள்ளூர் மக்களுக்கு ரூ.40, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
செல்வம்
சிஎஸ்கே போட்டி: டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!
கிச்சன் கீர்த்தனா: சாமை மாங்காய் சாதம்