இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 31) அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் தந்தையும், இசையமைப்பாளருமான இளையராஜா நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பதிவு செய்துள்ளார்..
அந்த காணொளியில்,
“ஒரு கால கட்டத்தில் ஆழியாறு சொகுசு பங்களாவிற்கு சென்று இசையமைப்பது வழக்கம்.
ஆழியாறு அணைக்கட்டு சொகுசு பங்களாவில் 2,3 நாட்கள் தங்கி 4,5 படங்களுக்கு கம்போஸ் செய்வது என திட்டமிட்டு சென்றுவிடுவோம்..
அந்த மாதிரி கம்போசிங் செய்ய இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கே.ஆர் .ஜி என்னை அழைத்து சென்றனர்.
நான் என் பக்க வாத்திய குழுவினருடன் சென்று கம்போஸ் எல்லாம் செய்து கொண்டிருந்தோம்.
தயாரிப்பாளர் கே.ஆர் .ஜி சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதால் சென்று வருவார்.
ஒருநாள் ஊருக்கு சென்று வந்தவுடனே “ஏய் உன் மனைவிக்கு டெலிவரி ஆகிருக்குயா’ உனக்கு பையன் பொறந்திருக்கான்.. ன்னு சொன்னார்..
அப்போ ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ஆனா அப்ப கூட பாருங்க மனைவிக்கு டெலிவரி டைம் ல கூட நான் கம்போஸ் செய்யற மாதிரி தான் இருந்திருக்கனே தவிர அவங்க பக்கத்தில் இருந்து பாத்துகிட்டது இல்லை. அவங்களும் அத பெருசா எடுத்துகிட்டது இல்லை.
அவர் வந்து சொன்ன நேரத்தில் ரொம்ப சந்தோசமாக இருந்தது. அன்று கம்போஸ் செய்தது இயக்குநர் மகேந்திரன் இயக்கி ரஜினி சார் நடித்த ஜானி படத்தின் செனோரீட்டா பாடல்..
கே.ஆர் .ஜி வந்து சொன்ன நேரத்துல பிறந்தது தான் யுவன்..
யுவன் ஹாப்பி பர்த்டே யுவன்” என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்..
- க.சீனிவாசன்
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா