இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ படம் உலகம் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
நடுத்தர குடும்பத் தலைவன் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தை காப்பாற்ற முன்னெடுக்கும் முயற்சிகள், அதில் வரும் பிரச்னைகள் என பல ட்விஸ்டுகளுடன் மிகவும் சுவாரஸ்யமான த்ரில்லராக வெளியான ‘திரிஷ்யம்’ மெகா பிளாக்பஸ்டர் ஆனது.
ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்களம், கொரியன் என பல மொழிகளிலும் ‘திரிஷ்யம்’ படம் ரீமேக் ஆனது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம் 2’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் தற்போது ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டு பாகங்களும் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
‘திரிஷ்யம்’ முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனமுடன் இணைந்து அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் ‘திரிஷ்யம்’ படத்தின் 2 பாகங்களையும் ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளது.
இந்த ரீமேக் தொடர்பாக ‘திரிஷ்யம்’ படத்தை தயாரித்த மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸிடம் இருந்து சர்வதேச ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. இதையடுத்து ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்கிற பெருமை ‘திரிஷ்யம்’ படத்திற்கு கிடைத்துள்ளது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தருமபுரம் ஆதீனம் விவகாரம்: பாஜக மாவட்ட தலைவரை பிடிக்க தனிப்படை தீவிரம்!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் வெடி விபத்து!