ar rahman son ar ameen

நொடியில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன்

சினிமா

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் கடவுளின் அருளால் உயிர் தப்பியதாக ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் இசைக்கலைஞரா மட்டுமில்லாமல் பாடகராகவும் உள்ளார்.

‘ஓ காதல் கண்மனி’, ‘தில் பேச்சாரா’ உள்ளிட்ட பல படங்களில் அவர் பாடகராக பணியாற்றியுள்ளார். அத்துடன் ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார்.

மேலும் அப்பா ஏ.ஆர்.ரஹ்மானுடன், நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர். அமீன் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், அதிர்ச்சி தரும் தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.அமீன் பகிர்ந்துள்ளார். அண்மையில் பாடலுக்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

ar rahman son ar ameen escapes from the accident

அதாவது இரண்டு தினங்களுக்கு முன்பு பாடல் படப்பிடிப்பு நடந்த போது அமீன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கேமரா முன் பாடுவதில் மும்மரமாக இருந்தனர்.

அப்போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரஸ் மற்றும் சரவிளக்குகள் திடீரென்று சரிந்து கீழே விழுந்தன.

அப்போது அமீன் மற்றும் குழுவினர் சற்று தள்ளி நின்றதால் விபத்தில் சிக்காமல் தப்பியிருக்கிறார்கள்.

இச்சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.அமீன், “இன்று பாதுகாப்பாகவும், உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஆன்மிக குருமார்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

மூன்று இரவுகளுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன், நான் கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தும் போது, என்ஜினியரிங் மற்றும் பாதுகாப்பைக் கவனித்துக்கொண்டிருக்கும் குழுவை நம்பினேன்.

ar rahman son ar ameen escapes from the accident

நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முழு டிரஸ் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன.

சில விநாடிகள் முன்னரோ பின்னரோ இருந்திருந்தால் அந்த கிரேன் எங்கள் தலையில் விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அந்த விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவிற்குப் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஏ.ஆர்.அமீனின் தந்தை ஏ.ஆர்.ரகுமான் “இறைவனின் அருள்” என்றும் தயாரிப்பாளர் போனி கபூர், “கடவுளுக்கு நன்றி, நீங்கள் நல்ல மனிதர் கடவுள் உங்களை பாதுகாப்பார்” என்றும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மோனிஷா

ஆளுநருக்கு எதிராக மக்கள்திரள் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

கட்சிப் பணி: கேள்வி கேட்ட அண்ணாமலை… கிளம்பிய நிர்மல்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *