சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘புறநானூறு’ படம் குறித்து, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக ‘கங்குவா’ படம் வெளியாகவிருக்கிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் நடித்து வருகின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அவரது அடுத்த படமான ‘புறநானூறு’ குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதாவது சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் உருவாகவிருந்த இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக படத்திற்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால், சிறிது நாட்கள் கழித்து இப்படம் ஷூட்டிங் தொடங்கும் என சுதா-சூர்யா இருவரும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் உண்மைக்காரணம் அது இல்லை என்றும், இந்த படத்தின் திரைக்கதை அதிக உழைப்பினை கோருவதாகவும் சுதா எழுதிய திரைக்கதைக்கு இரண்டு பாகங்களாக எடுத்தால் தான் படம் சரியாக இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளதாம்.
சுதா எழுதியதை படமாக எடுத்தால் சுமார் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் வருமாம். திரைக்கதையை சுருக்கவும் முடியாமல், எழுதியதை எடுக்கவும் முடியாமல் சுதா திணறி வருகிறாராம்.
இதனால் ‘வாடிவாசல்’, ‘வணங்கான்’ போல ‘புறநானூறு’ படத்தில் இருந்தும் சூர்யா விலகிட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றனவாம். என்றாலும் படக்குழு இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
10 ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வில் தவறான கேள்வி: உரிய மதிப்பெண் வழங்கக் கோரிக்கை!
ராமநாதபுரம் : 5 ஓபிஎஸ்-கள் போட்டி!
Seshu: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்