ராமநாதபுரம் : 5 ஓபிஎஸ்-கள் போட்டி!

அரசியல்

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயருடைய 5 பேர் வேட்புமனு தாக்கல்  செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். சுயேட்சை சின்னத்தில் போட்டியிட நேற்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தார். ஜல்லிக்கட்டு காளை, சேவல், தொப்பி ஆகிய ஏதேனும் ஒரு சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன் என்று அவர் கூறியிருந்த நிலையில், அதே தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயருடைய மேலும் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம்,

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒய்யாரம்  மகன் பன்னீர்செல்வம்,

மதுரை வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர்  மகன் பன்னீர்செல்வம்,

மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என அடுத்தடுத்து 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளர் பட்டியல் மற்றும் வாக்கு எண்ணும் பணி ஆகியவற்றில்  குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் அவருடைய பெயரில் உள்ளவர்களை சில கட்சிகள் வேண்டுமென்றே களமிறக்குவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Seshu: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

தேர்தலுக்குப் பின் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்: உதயநிதி

+1
0
+1
4
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0