இன்று (செப்டம்பர் 30) வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் திரையரங்கில் கண்டுகளித்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு காலை முதல் நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
காலை 4 மணி காட்சியை ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து திரையரங்கில் கொண்டாடினர். பொன்னியின் செல்வன் வெளியான அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் ஆனது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, ரசிகர்களுடன் சேர்ந்து சென்னை ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்த்தார்.
அப்போது, த்ரிஷாவுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதும், த்ரிஷா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அமரர் கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மனின் சகோதரியாக குந்தவை கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார்.
நந்தினி மற்றும் குந்தவை இடையேயான மோதலை நாவலில் சுவாரசியமாக சொல்லியிருப்பார்.
படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக, த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குந்தவை என பெயர் மாற்றம் செய்திருந்தார்.
மேலும், அவர் படக்குழுவினருடன் சென்னை, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றிருந்தார்.
படத்தின் இயக்குனர் மணிரத்னம் குந்தவை கதாபாத்திரத்திற்காக த்ரிஷாவிற்கு 50 லுக் டெஸ்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
‘நானே வருவேன்’ : கிண்டல் செய்த பார்த்திபன்
தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் : முதல் நாள் வசூலில் சாதனை படைக்குமா பொன்னியின் செல்வன்?