சத்தமே இல்லாமல் சாதனை படைக்கும், ‘நானே வருவேன்’

சினிமா

மீடியா முதல் மீம்ஸ்வரை பொன்னியின் செல்வனே மின்னி வரும் நிலையில்… சைலன்ட்டாக வெளிவந்து வைப்ரன்ட் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது தனுஷின் நானே வருவேன்.

தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநர், பெரிய நட்சத்திரப்பட்டாளம், பெரிய நிறுவனம் இந்தக் கூட்டணியில் எந்தப் படம் வந்தாலும் அது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்கும். அப்படி மிகப்பெரிய கூட்டணியில் 2 படங்கள் ஒரே நேரத்தில் வந்தால் சொல்லவா வேண்டும்?

ஒரு பக்கம் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமான வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வன், மறுபக்கம் இளைஞர்களின் இயக்குநர் செல்வராகவனின் நானே வருவேன் என்று அடுத்தடுத்து சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

பொன்னியின் செல்வன் இன்று (செப்டம்பர் 30) வெளியான நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக நானே வருவேன் திரையரங்குகளில் வெளியானது.

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நானே வருவேன். 11 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் – தனுஷ் கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது.

இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் கைக்கோர்த்து இருப்பதால் படத்தின் திரையிடலுக்காக சில மாதங்களாகவே காத்திருந்தனர் ரசிகர்கள்.

Dhanushs Nane Varvan is a blockbuster movie

படத்திற்கு பெரிய பிரமோஷன் செய்யவில்லை, ட்ரைலரில் கூட கதையம்சம் இதுவாகத்தான் இருக்கும் என்று கணிக்க முடியாதபடியே சஸ்பென்சாகவே இருந்தது நானே வருவேன்.

எதிர்பார்த்தபடி படமும் வெளிவந்தது. சைக்கோ – த்ரில்லர் என வித்தியாசமான கதையை தனுஷ் எழுத அதை காட்சிப்படுத்தியிருக்கிறார் அண்ணன் செல்வராகவன்.

பிரபுவும், கதிரும் இரட்டை குழந்தைகள். சிறு வயதிலிருந்து சைக்கோ குணத்துடன் இருக்கும் கதிர் பெற்ற தந்தையையே கொன்றுவிட, தாய் கதிரை விட்டுவிட்டு மற்றொரு மகனான பிரபுவுடன் சென்றுவிடுகிறார்.

இதனால் சிறுவயதில் இருந்தே மனஅழுத்தத்தில் இருக்கும் கதிர் கொடூர எண்ணம் படைத்தவராகவே வளர்கிறார்.

Dhanushs Nane Varvan is a blockbuster movie

அதே சமயம் சாந்த குணம், மனைவி மகள் என சந்தோஷமாக வாழ்கிறார் பிரபு. இரட்டை வேடத்தில் தனுஷே நடித்திருக்கிறார் என்றாலும் இரண்டிலுமே மாறுபட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

மகள் தான் உலகம் என்று வாழும் பிரபுவுக்கு திடீரென்று மகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றம் கலக்கத்தை உண்டாக்குகிறது. மகளின் உடம்புக்குள்  ஒரு கெட்ட ஆவி இருப்பதை கண்டுபிடிக்கிறார்.

அந்த ஆவி ஒரு கோரிக்கை வைக்கிறது. அதை செய்தால் மட்டுமே உன் மகளை விட்டுப் போவேன் என சொல்கிறது. அந்த கோரிக்கை என்ன? தனுஷும் அதை செய்யத் துணிகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதி கதை.

Dhanushs Nane Varvan is a blockbuster movie

தனுஷின் இரட்டை கதாபாத்திர நடிப்பும், தனுஷூக்கு மகளாக நடித்திருக்கும் ஹியா தவேவின் நடிப்பும் படத்தை உயிரோட்டமாக காட்டியிருக்கிறது. அதேபோன்று தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கும் இந்துஜா ரவிச்சந்திரனும் தேவையான நடிப்பை மட்டும் கொடுத்திருக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் யுவனின் பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதிலும் வீரா சூரா தீரா பாடல் அரங்கங்களை தெறிக்கவிடுகிறது. பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

Dhanushs Nane Varvan is a blockbuster movie

தந்தை மகள் பாசம் தமிழ் சினிமாவில் புதிது இல்லை என்றாலும், பேய் படங்களை பார்த்து பார்த்து பழகிப் போய் இருந்தாலும் தனது வித்தியாசமான முயற்சியின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது செல்வா – தனுஷ் – யுவன் கூட்டணி.

பொன்னியின் செல்வனின் பிரம்மாண்டத்துக்கு நடுவில் நானே வருவேன் தொலைந்து போய்விடும் என்ற விமர்சனங்களை பொய்யாக்கி வசூலுடன் ரசிகர்களின் மனதையும் அள்ளி வருகிறது. 650 திரையரங்குகளில் வெளியாகி சத்தமே இல்லாமல் முதல் நாளில் மட்டும் 10 கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது நானே வருவேன்.

அடுத்தடுத்த நாட்களிலும் நானே வருவேனின் வசூல் வேகமாக அதிகரிக்கிறது என்கின்றன பாக்ஸ் ஆபீஸ் பட்சிகள்!

கலை.ரா

பொன்னியின் செல்வன் எப்படி இருக்கிறது ?: ரசிகர்களிடம் கேட்ட விக்ரம்

பொன்னியின் செல்வன் : ரசிகர்களுக்கு தியேட்டரில் அதிர்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *