பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் வெடி விபத்து!

Published On:

| By Kavi

Bengaluru Rameswaram cafe explosion

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெடி விபத்து ஏற்பட்டது.

பெங்களூரு இந்திரா நகர் குண்டலஹள்ளி அருகே ஒயிட்ஃபீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கஃபே அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் இன்று மதியம் சுமார் 1 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், 3 ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் என 4 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஒயிட்ஃபீல்ட் தீயணைப்பு துறையினர் இந்த சம்பவம் குறித்து கூறும்போது, ​​”ராமேஸ்வரம் ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்த முழு தகவல் இன்னும் வெளி வராத நிலையில், மர்ம பொருள் வெடித்ததா அல்லது சிலிண்டர் வெடித்ததா என இரு கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒயிட்ஃபீல்டு துணை காவல் ஆணையர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்த விபத்து நடந்த போது, கஃபேவுக்கு அதிக பேர் வந்திருந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண கொண்டாட்டம் : ஜாம்நகரில் குவியும் உலக பிரபலங்கள்!

இந்த மாவட்டத்தில் தான் ‘வெயில்’ ரொம்ப அதிகமாம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel