Premalu: தமிழில் வெளியாகும் ‘பிரேமலு’ ரிலீஸ் தேதி இதுதான்!

Published On:

| By Manjula

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் மொழி கடந்தும் ரசிகர்களை வசீகரித்து வருகிறது. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு நடித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஸ்கரன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ஷ்யாம் புஸ்கரன், திலேஷ் போத்தன் ஆகியோருடன் இணைந்து முன்னணி நடிகர் ஃபஹத் பாசில் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

மொத்தம் ரூபாய் 5 கோடி பட்ஜெட்டில் உருவான ‘பிரேமலு’ இதுவரை உலகளவில் 100கோடி ரூபாயை வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. ஆரம்பத்தில் கேரளாவில் மட்டும் வெளியான இப்படம் தொடர்ந்து பிப்ரவரி 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

நாளுக்குநாள் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் பெண்கள் தினமான நேற்று (மார்ச் 8) தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இந்தநிலையில் வெளியாகும் இடமெல்லாம் வெற்றிவாகை சூடும் இப்படம் அடுத்ததாக தமிழிலும் வெளியாகவிருக்கிறது.

அதன்படி வருகின்ற மார்ச் 15-ம் தேதி தமிழில் ‘பிரேமலு’ டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையினை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் – திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து: எத்தனை சீட்?

Movie Review : ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – திரை விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel