சல்மான் கான் மீது முன்னாள் காதலி பகீர் புகார்!

சினிமா

56 வயதாகும் பாலிவுட் நடிகரான சல்மான் கானின் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது.

அவர் இன்னும் சிங்கிளாகத் தான் இருக்கிறார். சல்மான் கானும், நடிகை லூலியா வந்தூரும் காதலிப்பதாக பேசப்படுகிறது.

இந்நிலையில், சல்மான் கான் பற்றி அவரின் முன்னாள் காதலியும் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகையுமான சோமி அலி சமூக வலைதளத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

சல்மான் கானும், சோமி அலியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அந்த படம் கைவிடப்பட்டது. சல்மானும், சோமியும் சுமார் 10 ஆண்டுகளாக காதலித்தார்கள்.

இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு சண்டை போட்டு பிரிந்ததாக அப்பொழுது தகவல் வெளியானது.

Salman Khan beats women ex girlfriend Somi Ali

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் ’பெண்களை அடிப்பவர்’ என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோமி அலி கூறியுள்ளார்.

இப்பதிவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”சல்மான் கான் பெண்களை அடிப்பவர். என்னை மட்டுமல்ல, பல பெண்களையும் சல்மான் கான் அடித்துள்ளார்.

அவரை வழிபடுவதை ரசிகர்கள் தயவுசெய்து நிறுத்துங்கள். உங்களுக்கெல்லாம் தெரியாது அவர் ஒரு மிகப்பெரும் சாடிஸ்ட்” என சோமி அலி பதிவிட்டுள்ளார்.

Salman Khan beats women ex girlfriend Somi Ali

இந்தப் பதிவு பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் இந்த பதிவை இன்ஸ்டாகிராமில் இருந்து சோமி அலி தற்போது நீக்கியுள்ளார்.

மேலும், சோமி அலி தன் 17 வயதில் நடிகர் சல்மான் கானுடன் காதலில் விழுந்ததாகவும், அப்போது சல்மான் கான் தனக்கு காதலி இருப்பதாகக் கூறியதாகவும்,

தொடர்ந்து ஓராண்டு கழித்து சல்மான் கான் என்னை காதலிக்கத் தொடங்கி இருவரும் டேட்டிங் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Salman Khan beats women ex girlfriend Somi Ali

பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய் தொடங்கி, கேத்ரினா கைஃப், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் என பலருடனும் சல்மான் கான் காதலில் இருந்துள்ளார்.

மேலும், இவர்களில் ஐஸ்வர்யா ராய் சல்மான் தன்னிடம் முரட்டுத் தனமாக நடந்துகொண்டதாக பேட்டி ஒன்றிலேயே தெரிவித்துள்ளார்.

மேலும், கேத்ரினா கைஃபிடமும் சல்மான் கான் ஏக் தா கபூர் படப்பிடிப்பின்போது முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பொன்னியின் செல்வன் சுற்றுலா: தமிழக அரசின் டைம்லி ஏற்பாடு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *