ராதாரவி சர்ச்சைகள் ஓயாது போலிருக்கிறது. லேட்டஸ்டாக தாடி பற்றி பேசி அடுத்த வம்புக்கு வித்திட்டிருக்கிறார், பாஜகவை சேர்ந்த ராதாரவிக்கு அதே பாஜகவில் இணைந்த இயக்குனர் பேரரசு சினிமா விழாவொன்றில் பதிலளித்துள்ளார்.
ஆகஸ்டு 20 ஆம் தேதி ‘டைட்டில்’ என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது.
பாடல்காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் ஸ்கிரீன் பண்ணினார்கள். சிறப்பு விருந்தினர்களாக கே.பாக்யராஜ், ராதாரவி, டைரக்டர்கள் பேரரசு, ராஜ்கபூர், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் சிலர் விழாவிற்கு வரவில்லை. அவர்களின் பெயரைச் சொல்லி, ’இவன் ஏன் வரல? அவன் வரலயா?’ என தனது வழக்கமான ஸ்டைலில் பேசிய ராதாரவி, “பாக்யராஜ் அண்ணன் வெள்ளை தாடியுடன் இருக்காரு.
ஏன்னு தெரியல, ஏதாவது காரணம் இருக்கும். அதே மாதிரி மேடையில் இருக்கும் முக்கால்வாசி பேர் தாடி வச்சிருக்கான். இப்ப எவனப் பார்த்தாலும் தாடியோட தான் திரியுறான்.
இதெல்லாம் நல்லாவா இருக்கு. டெய்லி காலையில ஷேவ் பண்ணி ஃபிரஷ்ஷா இருங்க. காலையில ஷேவ் பண்ணாம நான் வெளியில வரமாட்டேன்.
அப்புறம் தியேட்டர்ல டிக்கெட் ரேட் கூடிருச்சு, பாப்கான் விலை கூடிப்போச்சு, கேக், தண்ணி பாட்டில் விலை தாறுமாறா இருக்குன்னு மக்கள் புலம்புறான்.
உன்னை எவன் அதெல்லாம் வாங்கச் சொன்னான். டிக்கெட் மட்டும் எடு, படம் பாரு, வீட்டுக்குப் போ” என சரவெடி வெடித்துவிட்டு விருட்டென கிளம்பினார் ராதாரவி.
அடுத்துப் பேச வந்த டைரக்டர் பேரரசு, “வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வதே அண்ணன் ராதாரவிக்கு வேலையாப் போச்சு.
தாடியப் பத்தி பேசுனாரே. பிரதமர் மோடியும் தாடி வச்சிருக்காரு. நம்ம அண்ணாமலை கூட கொஞ்ச நாள் தாடி வச்சிருந்தாரு. இவர்களைப் பத்தி பேச வேண்டியது தானே” என பதிலடியாக பேசிவிட்டு, ‘டைட்டில்’ படத்தைப் பற்றியும் பேசினார் பேரரசு.
சினிமாவுலயும் அரசியல்லயும் வாரிசுகள் வரணும்: மோடிக்கு எதிராக ராதாரவி அடுத்த அட்டாக்!