கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ’ படத்தின் டீசர் இன்று (டிசம்பர் 11 ) வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். கடந்த 2014-ஆம் ஆண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் அவர் இயக்கிய ‘ஜிகர்தண்டா ’ நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா,லட்சுமி மேனன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் உருவாகும் என கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான டீசர் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இதில் கேங்ஸ்டர் கெட்டப்பில் லாரன்ஸ், வித்தியாசமான கெட்டப்பில் எஸ்.ஜே.சூர்யாவும் உள்ளனர்.
டீசரில் எஸ்ஜே சூர்யா மௌதார்கன்னுடன் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த வித்தியாசமான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இளகிய மனது! மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல் காந்தி
சுக்விந்தர் சிங் சுகு பதவி ஏற்பு: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!