இமாச்சல் பிரதேச மாநில முதல் அமைச்சராக இன்று (டிசம்பர் 11 ) சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றுள்ளார்.
கடந்த மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இமாச்சலப்பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவும் துணை முதல்வராக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதல்வராக சுக்விந்தர்சிங் சுகு பதவி ஏற்ற நிலையில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர்சிங் சுகுவுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , இமாச்சல் பிரதேச முதல் அமைச்சராக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாழ்த்துகள் உங்கள் உயர்வு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இமாச்சல் பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில் ,வெற்றிகரமான பதவிக் காலம் அமைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வாய்ப்பு வழங்காத இந்தியா:அயர்லாந்து அணிக்கு போகிறாரா சஞ்சு சாம்சன்?
அன்று பால் வியாபாரி இன்று முதல்வர் : யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு?