EID 2024: ரம்ஜான் ஸ்பெஷலாக இத்தனை படங்கள் வெளியாகிறதா?

சினிமா

ரம்ஜான் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

வழக்கமாக வெள்ளிக்கிழமை தான் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போது, ஒருநாள் முன்னதாகவே படங்கள் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில் ரம்ஜானை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 11) எத்தனை படங்கள் திரைக்கு வருகின்றன என்னும் விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

தமிழ்

தமிழை பொறுத்தமட்டில் ஜிவி பிரகாஷின் டியர் மற்றும் விஜய் ஆண்டனியின் ரோமியோ என இரண்டு படங்கள் வெளியாகின்றன. இரண்டுமே காதல் மற்றும் காமெடி கலந்த படங்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இரு படங்களுமே வரவேற்பினை பெறும் எனத் தெரிகிறது.

மலையாளம்

பிரணவ், நிவின் பாலி நடிப்பில் வர்ஷங்களுக்கு சேஷம், உன்னி முகுந்தனின் ஜெய் கணேஷ் மற்றும் பஹத் பாசிலின் ஆவேஷம் ஆகிய 3 படங்கள் நாளை வெளியாகின்றன. இவற்றில் எந்த படம் ஹிட் அடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தெலுங்கு

அஞ்சலி, ஸ்ரீனிவாச ரெட்டி நடிப்பில் ஹாரர்+காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கும் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி திரைப்படம் தெலுங்கில் நாளை வெளியாகிறது.

இந்தி

அக்ஷய் குமார், டைகர் ஷெராப் நடிப்பில் படே மியான் சோட்டே மியான் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் மைதான் ஆகிய இரண்டு படங்கள் ரம்ஜானை முன்னிட்டு நாளை வெளியாகின்றன.

ஆங்கிலம்

கிர்ஸ்டன் டன்செட், வாக்னர் மோரா நடிப்பில் சிவில் வார் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது. நாளை மறுநாள் (ஏப்ரல் 12) வெளிநாடுகளில் வெளியாகும் இப்படம் இந்தியாவில் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Thalapathy 69: டிவிவி நிறுவனம் அவுட்… முட்டி மோதும் 3 நிறுவனங்கள்?

நடிகை ஆர்த்தியா இது?… அடையாளமே தெரியல… ஷாக்கான ரசிகர்கள்!

Video: “நான் பேச வேண்டாமா?”… மேடையில் நடிகை அனுபமாவிற்கு நடந்த மோசமான சம்பவம்…!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *