ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘மிஷன் சேப்டர் 1’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது.
அருண் விஜய் நடிப்பில் ‘மிஷன் சேப்டர் 1’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘மேரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ம் தேதி வெளியானது.
இதில் அருண் விஜயின் ‘மிஷன் சேப்டர் 1’ படத்தினை ஆக்சன் + எமோஷனல் ஜானரில் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் மற்றும் அப்பா மகள் சென்டிமென்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதில் ‘அயலான்’ படத்தினை சன் நெக்ஸ்ட் கைப்பற்ற ‘கேப்டன் மில்லர்’ படத்தை அமேசான் நிறுவனமும், ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றின. ஆனால் ‘மிஷன் சேப்டர் 1’ படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகவில்லை.
இதனால் ரசிகர்களே ஒருகட்டத்தில் பொறுமையிழந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? என படக்குழுவினரிடம் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி வருகின்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 15) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ‘மிஷன் சேப்டர் 1’ வெளியாகிறது. இந்தியாவிற்கு வெளியில் இருப்பவர்கள் இப்படத்தினை, சிம்பிளி சவுத் ஓடிடி பிளாட்பார்மில் பார்த்து ரசிக்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடுமை, கண்ணியம் : மத்திய தேர்தல் பார்வையாளர்களுக்குத் தலைமை ஆணையர் அறிவுறுத்தல்!