மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ‘பிரேமம்’. இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
சிறுவயதிலேயே மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
2016 ஆம் வருடம் தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசி ஆகிவிட்டார் .
இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘சைரன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் இந்த வருடம் அனுபமாவுக்கு சிறந்த வருடம் தான்.
காரணம் தெலுங்கில் அவர் நடித்த ‘தில்லு ஸ்கொயர் ‘என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. வெளியான இரண்டு வாரங்களிலேயே 100 கோடி வசூல் வேட்டை செய்துள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவின்போது, நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு மோசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெற்றிவிழாவில் நடிகர் ஜூனியர் என்டிஆர், மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முன்னிலையில் மேடையில் ஏறிய அனுபமா பேசத்துவங்கிய போது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
🤦♂️ Our Crowd!
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 9, 2024
தொடர்ந்து அவர் பேச முயற்சித்த போதும் ரசிகர்கள் கத்தியதால், ”நான் பேச வேண்டாமா?” என்று அவர் தெலுங்கில் கேட்க, வேண்டாம் என்பது போல ரசிகர்கள் கத்தினர். இதையடுத்து நன்றி மட்டும் தெரிவித்து விட்டு மேடையில் இருந்து அனுபமா இறங்கினார்.
ஒரு மிகப்பெரும் நடிகை என்றும் பாராமல், ரசிகர்கள் கத்திக் கூச்சலிட்ட இந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rain Update: இடி, மின்னல், மழை எல்லாமே இருக்கு… எங்கேன்னு பாருங்க!
மதுரையில் பயங்கரம்… அதிவேகமாக வந்து கார் மோதியதில் 6 பேர் பலி!
கம்பேக் கொடுக்குமா கோலிவுட்?.. சம்மரில் களமிறங்கும் படங்களின் லிஸ்ட் இதோ..!