வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 5 அன்று வெளியான படம் ‘சீதா ராமம்’ உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
நடிகர் துல்கர் சல்மான், இந்தி நடிகை மிருணாள் தாக்கூர், கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், முக்கியமான வேடத்தில் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள காதல் கதையான ‘சீதா ராமம்’, படம் உலகம் முழுவதும் வயது வித்தியாசம் இன்றி பார்வையாளர்களை வசீகரித்து வசூலை குவித்து வருகிறது
தெலுங்கில் தயாரிக்கப்பட்டாலும் தமிழ், இந்தி, மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. படம் வெளியான முதல் நாள் வசூல் மிக மந்தமாகவே இருந்தது படம் அவ்வளவுதான் என்கிற விமர்சனங்கள் வணிக வட்டாரங்களில் எழுந்தன.
எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவானது. அதே தளத்தில் படத்தை உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள் விமர்சகர்களும், நல்ல சினிமாவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களும்.
இரண்டாம் நாள் முதல் திரையரங்குகள், காட்சிகள் அதிகரித்தது. எல்லா மொழியிலும் சீதாராமம் படத்தை மொழிமாற்று படமாக யாரும் பார்க்கவில்லை. தங்கள் மொழி படத்தை பார்த்த உணர்வையே அவர்களுக்கு தந்தது படம். அதனால் இரண்டாம் நாளில் இருந்து படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கியது.
இதுவரை ‘சீதா ராமம்‘ உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. வேலை நாட்களில் முன்பதிவுகள் படத்தின் வெற்றியை உறுதி செய்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி, தமிழ் படங்கள் திரையரங்குகளில் வசூல் குவிக்க தடுமாறிவரும் நிலையில் தெலுங்கு படங்களான புஷ்பா,ஆர் ஆர் ஆர், மற்றும் கேஜிஎஃப் போன்ற படங்கள் சர்வதேச பாக்ஸ்ஆபீஸ் வசூலில் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
–இராமானுஜம்
தளபதி 67: விஜய்க்கு ஜோடி யார்?
Mr.Ramanujam did you forgot Kamal’s Vikram Movie.