குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகைகள் வெகு சிலரே உள்ளனர். அந்த பட்டியலில் நடிகை ஆர்த்தியும் ஒருவர்.
இவர் தனது நீண்ட நாள் காதலரான கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாம் சீசனில், நடிகை ஆர்த்தியும் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் உறுப்பினராக இருந்த நடிகை ஆர்த்தி ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு கட்சியில் இருந்து விலகி இருந்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நேற்றைய (ஏப்ரல் 9) தினம் பாஜகவில் இணைந்து ஷாக் குடுத்தார்.
இந்நிலையில் நடிகை ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் அவர் மிகவும் மெலிந்து ஃபிட்டாக காணப்படுகிறார்.
புகைப்படத்திற்கு தலைப்பாக அவர், “புதிய நான். கடின உழைப்பால் எனது எடைக்குறைப்பு பயணம் வெற்றியடைந்துள்ளது”, என்று கூறியுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பணமோசடி… ஆற்றல் அசோக் மீது தாய்மாமா பகீர் புகார்: பரபரக்கும் ஈரோடு களம்!
கெஜ்ரிவால் கோரிக்கை : உச்சநீதிமன்றம் மறுப்பு!
Video: “நான் பேச வேண்டாமா?”… மேடையில் நடிகை அனுபமாவிற்கு நடந்த மோசமான சம்பவம்…!