தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறாரா தேவா?… வெளியான சுவாரஸ்ய தகவல்!

சினிமா

தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படம் ராயன். அவரே இயக்கி, நடிப்பதால் இப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனது ஐம்பதாவது திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார்.

‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அவருடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி போன்ற பலர் நடித்துள்ளனர்.

வடசென்னையை மையமாகக் கொண்ட கதைக் களத்தில் தனுஷ் மீண்டும் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க இசையமைப்பாளர் தேவாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தேவா, “ஆம் உண்மைதான்.வடசென்னை பாஷையை சிறப்பாக பேசக்கூடியவர் என்பதால் தனுஷ் என்னிடம் கேட்டார் ஆனால் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை.

நமக்கு எப்போதுமே இசை தான்”, என்று கூறியுள்ளார். இதையடுத்து தனுஷுக்கு வில்லனாக ராயன் திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” : அண்ணாமலை திட்டவட்டம்!

கடைசி நாள் பிரச்சாரம் : மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

IPL 2024: நல்லவேளை அந்த தம்பிக்கு ஹெல்மெட் குடுக்கல… மீம்ஸ்களால் கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *