உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என இன்று (ஏப்ரல் 17) கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கோவை தொகுதியில் இன்று (ஏப்ரல் 17) இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார் அண்ணாமலை. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் ’பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா?’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் தேர்வை ரத்து செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியலே எனக்கு தேவையில்லை.
நீட் தேர்வால்தான் ஏழை எளிய மக்கள் தற்போது மருத்துவம் படித்து வருகிறார்கள். நீட் தேர்வு என்பது மருத்துவம் படிக்க முயலும் ஒவ்வொரு மாணவருக்கும் அவசியமானது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக கூட்டணியில் பாமக உட்பட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என அண்ணாமலை கூறியிருப்பது பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரேநாளில் கொட்டித்தீர்த்த 2 ஆண்டுக்கான மழை… வெள்ளத்தில் மிதக்கும் துபாய்!
திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்…மண்டல வாரியாக செல்வாக்கு யாருக்கு? மெகா சர்வே ரிசல்ட்!