விஜயின் கடைசி படமான தளபதி 69-ல் இருந்து, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கும் விஜய் தற்போது தன்னுடைய 68-வது படமான, GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தற்போது வெளிநாடு சென்றுள்ளது. இந்தநிலையில் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் இருந்து, டிவிவி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் விலகிவிட்டதாக தெரிகிறது.
இந்த படத்தின் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததில் இருந்தே விஜய் ஹீரோ, தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்பது மட்டும் தான் உறுதியாகி இருந்தது.
ராம்சரண்-ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த ஆர்ஆர்ஆர் படத்தினை டிவிவி தான் தயாரித்து இருந்தது. எனவே அதேபோல விஜயின் கடைசி படமும் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டிவிவி தற்போது படத்தில் இருந்து விலகியுள்ளது. இதற்கிடையில் கடைசி படத்தை சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் என்டெர்டெயின்மெண்ட் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய 3 நிறுவனங்களில் ஒன்று தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.
விஜயின் கடைசி படம் அரசியல் சார்ந்த கதையாக உருவாகவுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக திரிஷா, சமந்தா, அலியா பட், மிருணாள் தாகூர் ஆகிய நால்வரில் ஒருவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகை ஆர்த்தியா இது?… அடையாளமே தெரியல… ஷாக்கான ரசிகர்கள்!
பணமோசடி… ஆற்றல் அசோக் மீது தாய்மாமா பகீர் புகார்: பரபரக்கும் ஈரோடு களம்!
கெஜ்ரிவால் கோரிக்கை : உச்சநீதிமன்றம் மறுப்பு!