நடிகர் விக்ரம் இன்று (ஏப்ரல் 17) தனது 58-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் நடிக்கும் 62-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் ‘நடிப்பு அசுரன்’ என்று விக்ரமை தாராளமாக சொல்லலாம். அந்த அளவிற்குத் = தான் நடிக்கும் படங்களில் முழு உழைப்பையும் கொடுப்பவர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் ஒன்றி நடிக்கக்கூடியவர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் விக்ரம் நடித்துள்ள இப்படம் பல விருதுகளை வெல்லும் என்று தெரிகிறது.
விக்ரம் நடிக்கப் போகும் 62-வது திரைப்படத்தை ‘சித்தா’ பட இயக்குனர் அருண்குமார் இயக்க இருக்கிறார். படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தநிலையில் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
If you’re a Gangsta ..
I’m a Monsta!! #Veeradheerasooran pic.twitter.com/SZSdu8RkyB— Vikram (@chiyaan) April 17, 2024
இதில் விக்ரம் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரைத் தேடி ரவுடிகள் கூட்டம் படையெடுக்கிறது.
அவர்களை தனக்கே உரித்தான ஸ்டைலில் விக்ரம் ஓட விடுகிறார். டீசரைப் பார்த்த ரசிகர்கள் இந்த காம்போ நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மேலும் விக்ரம் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. படத்தில் கிராமத்து நாயகன் ஆக வாழும் விக்ரம் அநீதிகளுக்கு எதிராக அய்யனார் போல களமாடுகிறார்.
மறுபுறம் அப்பாவியாக மளிகைக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரால் பாதிக்கப்பட்ட வில்லன்கள் இவரைத் தேடி வருவது போல திரைக்கதையை அருண்குமார் அமைத்துள்ளதாகத் தெரிகிறது.
முகத்தை மறைத்து வாழும் சூப்பர் ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். இதனால் இப்படம் விக்ரம்-அருண்குமார் இருவருக்கும் ஒரு பெரிய பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 மக்களவைத் தேர்தல்: ஓய்ந்தது பிரச்சாரம்!
ஷங்கரின் ‘உதவி இயக்குநர்’ கிடையாது… தருண் கார்த்திகேயன் ‘பின்னணி’ இதுதான்!
தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறாரா தேவா?… வெளியான சுவாரஸ்ய தகவல்!