ஷங்கரின் ‘உதவி இயக்குநர்’ கிடையாது… தருண் கார்த்திகேயன் ‘பின்னணி’ இதுதான்!

சினிமா

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், ராம்சரண், சூர்யா, கார்த்தி, ரன்வீர் சிங் மற்றும் இயக்குநர்கள் வெற்றிமாறன், அட்லி என திரையுலகினரும் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்தநிலையில் தருண் கார்த்திகேயன் தான் ஷங்கரின் உதவி இயக்குநர் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், ”நான் ஷங்கர் அங்கிளின் அசிஸ்டெண்ட் கிடையாது. அப்பா அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். அதனால் நானும் ஐடி படித்து இருக்கிறேன். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”, என்று பேசியுள்ளார்.

தருணிற்கு சினிமா மீது தீராத காதல் இருந்ததால், இந்தியாவிற்கு வந்த அவர் ஹரியின் ரத்னம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். ஹரியும், தருணின் அப்பாவும் நண்பர்கள் என்பதால் தருணின் சினிமா கனவு சாத்தியமாகி இருக்கிறது.

மேலும் தருண் கார்த்திகேயன்-ஐஸ்வர்யா ஷங்கர் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் உதயநிதி… ஈரோடு சென்ற பின்னணி!

தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறாரா தேவா?… வெளியான சுவாரஸ்ய தகவல்!

IPL 2024: நல்லவேளை அந்த தம்பிக்கு ஹெல்மெட் குடுக்கல… மீம்ஸ்களால் கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *