திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று (ஏப்ரல் 30) நடைபெற்றது.
தலைவர், 2 துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர், மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பிரதான அணிகளாக, தற்போதைய தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும், தற்போதைய செயலாளர் மன்னன் ஃபிலிம்ஸ் தலைமையில் இரண்டு அணிகளும் என மூன்று அணிகள் போட்டியிட்டன.
நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று (மே 1) காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தலைவராக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மோனிஷா
’தினமும் பால்’: கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கையில் குவிந்த இலவசங்கள்!
திமுகவுடன் மதிமுக இணைப்பா?: துரைசாமிக்கு வைகோ பதில்!