பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன், சைரன் ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அடுத்ததாக மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்த ஜெயம் ரவி விலகி விட்டார்.
அதனை தொடர்ந்து, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஃபேண்டஸி படமான ஜீனி படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அறிமுக இயக்குனர் அர்ஜூனன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜீனி’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இது வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, ஜீனி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸில் தியேட்டரிக்கல் ரைட்ஸ் இல்லாமலேயே இந்த படம் 60 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் ப்ரீ ரிலீஸ் பிசினஸிலேயே இத்தனை கோடிகளை ஈட்டி இருப்பது மிகப் பெரிய ரெக்கார்ட் பிரேக் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜீனி படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவிக்கு எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 ஆகிய படங்கள் லைன் அப்பில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் ஐ.டி ரெய்டு!
”வாழ்நாளில் அவரை மறக்கவே முடியாது” : ஆர்.எம்.வீ குறித்து ரஜினி, கமல் உருக்கம்!
வெறும் பானைக்குள்ள ரெய்டு : அப்டேட் குமாரு