பிரபல தமிழ் வில்லன் நடிகர் மரணம்… திரையுலகினர் சோகம்!

Published On:

| By Manjula

சமீப காலமாகவே தமிழ் சினிமா நடிகர்கள் மாரடைப்பால் இறக்கும் செய்திகள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த மாதம் புகழ்பெற்ற நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம் அடைந்தார். வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி எடுக்கும் அவரது மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து காமெடி நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த அவர் பல தமிழ் திரைப்படங்களில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்பொழுது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் நேற்று (ஏப்ரல் 11) மரணம் அடைந்துள்ளார். இவர் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

அழகி, தென்றல், சிங்கம், லிங்கா போன்ற தமிழ்ப் படங்களில் இவர் நடித்துள்ளார். சினிமாவை விடவும் அரசியலில் அதிக ஆர்வம் உடைய நடிகர் அருள்மணி, கடந்த 10 நாட்களாக அதிமுகவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் நேற்றைய தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி தமிழ் ரசிகர்களையும், அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவின்போது முன்னின்று அனைத்து உதவிகளையும் செய்தவர் அருள்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது!

ஜோஹோ நிறுவனருக்கு புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!

சிறுத்தை நடமாட்டம்: அரியலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share