WhatsApp: வரப்போகும் சூப்பர் அப்டேட்… இது நல்லாருக்கே!

டிரெண்டிங்

உலகம் முழுவதும் 3.031 பில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து வாட்ஸ் ஆப் சுமார் 9.02% வளர்ச்சியை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் செயலி பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு மெட்டா வசம் சென்றதில் இருந்து, அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

வாடிக்கையாளர்களுக்காகவும், போட்டி செயலிகளில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டவும் பல்வேறு முயற்சிகளையும் மெட்டா நிறுவனம் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய அப்டேட் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. இன்ஸ்டாகிராமில் உள்ளது போலவே வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ் வைக்கும் போது, குறிப்பிட்ட நபரை மென்ஷன் அல்லது டேக் செய்ய முடியும் என்பதுதான் அந்த அப்டேட்.

யோதா : விமர்சனம்!

இவ்வாறு குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்யும் போது அவருக்கு நோட்டிபிகேஷன் சென்றுவிடும். இதனால் கம்யூனிகேஷன் பலப்படுவதுடன் சுவாரசிமான உரையாடல் அனுபவமும் கிடைக்கும்.

தற்போது இந்த அப்டேட் சோதனையில் உள்ளதாகவும், அடுத்தடுத்த அப்டேட்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிகிறது. இந்த லேட்டஸ்ட் அப்டேட்டினை வாட்ஸ் அப் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் WABetaInfo தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

-பவித்ரா பலராமன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை

WPL 2024: எல்லிஸ் பெர்ரி டூ ஸ்ரேயங்கா பாட்டீல்… யாருக்கு எந்த விருது? எவ்வளவு பரிசுத்தொகை?

பொன்முடிக்கு மறுப்பு… ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய திமுக எம்பி கோரிக்கை!

+1
0
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *