ரொம்ப நாளைக்கு பிறகு இன்னைக்கு நம்ம அரசியல் கட்சி நண்பர் ஒருத்தர பாக்க போயிருந்தேன்…
தேர்தல் பணிகள்ல ரொம்பவும் பிஸியா போன்ல பேசிக்கிட்டு இருந்தாப்ல…கால் மணி நேரம் கழிச்சு, “சாரி நண்பா…தேர்தல் நெருங்க நெருங்க வேலையும் அதிகமாகிட்டு போகுது….சரி, நீங்க வந்த வேலைய சொல்லுங்கன்னு” கேட்டாப்ள…
“ஒன்னும் இல்ல நண்பா, உங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு…உங்க ஏரியா பக்கம் வந்திருந்தேன்… அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்… இந்த தடவையாவது உங்க கட்சி ஜெயச்சிருமா…கூட்டணி பேச்சுவார்த்தையெல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்குன்னு” கேட்டேன்…
அதுக்கு அவரு, “அட நீங்க வேற நண்பா விடிஞ்சா நாமினேஷன், இன்னும் கூட்டணியே ஃபார்ம் ஆகல.. நேத்து கட்சி ஆபீஸ் போய் தலைவர எங்கன்னு கேட்டேன்…ரூம்ல கண்ணாடியோட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்காருன்னு கட்சிக்காரங்களே கலாய்க்கிறாங்க நண்பா…தப்பித்தவறி நீங்க இதை யாருக்கிட்டயும் சொல்லிறாதீங்கன்னு” சொன்னாப்ல….
நானும் அவருகிட்ட சரின்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
காற்றுள்ள போதே ‘கூட்டணியை’ பேசி கொள் –
புது பழமொழி ????
ச ப் பா ணி update kumaru march-19-2024
பேர் தெரியாத எல்லாருக்கும் இருக்கும் புனைபெயர் தான்
‘எக்ஸ்க்யூஸ் மீ’
mohanram.ko update kumaru march-19-2024
தேர்தல் வந்துட்டா நம்ம கட்சியை தேடுறாங்க மாமா
மக்களா… மாப்ள
மக்களா? கூட்டணி வைக்கும் கட்சிங்க மாமா
ச ப் பா ணி
திமுகவும் காங்கிரஸும் குடும்ப அரசியல் செய்து வருகின்றனர்! – பிரதமர் மோடி!
#இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி
mohanram.ko
முதல்ல குடும்பம் தான், அப்புறம் தான் கட்சி எல்லாம்
கூட்டணி வைத்த கட்சி தலைவர் – நான் என்னை சொன்னேன்
தாய்மாமன் முறையான கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய வேண்டும் – கார்த்தி சிதம்பரம்!
பதிலுக்கு தாய்மாமனுக்கு நீங்க என்ன செய்வீங்க ? அவரு நடிச்ச படத்தையெல்லாம் நெட்ப்ளிக்ஸ் ல தேடி தேடி பார்ப்பேன்?!
Meanwhile சீமான் ~ ஹலோ ஹலோ மைக்டெஸ்ட்டிங், கரும்பு விவசாயி சின்னம் எங்களுக்கு எப்போ கிடைக்கும்..?!
சாமுவேல் ராஜா
உங்ககிட்ட என்ன தனித்திறமை இருக்குங்க பீர் பாட்டிலை ஓப்பனர் இல்லாம பல்லால் கடிச்சு ஓபன் பண்ணுவேன் தோழி!
நீங்க ஏன் Stylish சா signature போட மாட்றீங்க
Me – அடுத்த தடவை அதே Sign போட வராது மேடம்.
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெங்களூரு ஓட்டலில் தமிழர்கள் குண்டு வைத்தார்களா? – மத்திய அமைச்சரின் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்!
ஒத்த ராஜ்யசபா சீட்டு.. அதிமுக, பாஜகவிடம் மல்லுக்கட்டும் தேமுதிக