மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான “பட்டம் போலெ” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
இதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அவர்களில் ஒரு ரசிகர், ’எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் கனவு?’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு மாளவிகா மோகனன், “கேங்ஸ்டராக நடிக்க ஆசை. அதிலும் ஒரு பெண் கூலான கேங்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா?
இப்போது நான் ஆக்சன் சீன்களுக்கு பயிற்சி பெற்றிருப்பதால், அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்” என்று அவர் பதிலளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்