பெங்களூரு ஓட்டலில் தமிழர்கள் குண்டு வைத்தார்களா? – மத்திய அமைச்சரின் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்!

Published On:

| By Selvam

Mk stalin condemned Shobha Karandlaje

தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வந்து பெங்களூரு கஃபே ஓட்டலில் வெடிகுண்டு வைத்துள்ளார் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 19) கண்டனம் தெரிவித்துள்ளார். Mk stalin condemned Shobha Karandlaje

பெங்களூரு குண்டனஹல்லி பகுதியில் பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட நபர் குறித்த புகைப்படத்தை என்ஐஏ வெளியிட்டு தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவித்தது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த ஷபீரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த மார்ச் 13-ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பெங்களூருவில் இன்று ஹனுமான் பாடலை தனது கடையில் ஒளிபரப்பிய கடைக்காரர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மற்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷோபா,

“இங்கு யார் ஆட்சி நடக்கிறது என்று சித்தராமையாவிடம் கேட்க விரும்புகிறேன். இந்துக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? இங்கு இந்துக்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வந்து ஓட்டலில் வெடிகுண்டு வைத்துள்ளார்.

மற்றொரு நபர் டெல்லியில் இருந்து வந்து கர்நாடகா சட்டசபையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்புகிறார். கேரளாவில் இருந்து வந்த மற்றொரு நபர் கல்லூரி மாணவர்கள் மீது ஆசிட் வீசியுள்ளார்.

ஒரு கடையில் ஹனுமான் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனை சிலர் அடிக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த அரசு சிறுபான்மையினரை பாதுகாக்கிறது. இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதால், கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஷோபாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“மத்திய பாஜக அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனங்கள். பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் மறுப்பார்கள்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். Mk stalin condemned Shobha Karandlaje

பிரதமர் முதல் அக்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஷோபா மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒத்த ராஜ்யசபா சீட்டு.. அதிமுக, பாஜகவிடம் மல்லுக்கட்டும் தேமுதிக

ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share