ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது கீரைகளை உண்ண வேண்டும். நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் தினமும் நாம் உண்ணும் உணவின் மூலம் தான் கிடைக்கிறது.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் சரிவிகித அளவு உணவை சாப்பிட வேண்டும். இதில் கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. கீரைகள் பல வகை உண்டு. அதில் சிறந்த ஒன்று பொன்னாங்கன்னி கீரை. இது சருமத்திற்கு பளபளப்பான நிறத்தை தரக்கூடியது. இதன் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
பொன்னாங்கண்ணி கீரையின் பலன்களை பற்றி பார்க்கலாம்:
பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
பொன்னாங்கண்ணி கீரை உடல் எடையை குறைக்க மட்டுமில்லாமல் அதிகரிக்கவும் உதவுகிறது.
பொன்னாங்கன்னி கீரையில் துவரம் பருப்பு, நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், எலும்புகள் உறுதியாகி உடல் வலிமை பெரும்.
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நீங்கும்.
செல்போன், கணிணி பார்ப்பவர்கள், இரவில் சரியாக தூக்கம் வராதவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சிவத்தல் நீங்கி நன்றாக தூக்கம் வரும்.
பொன்னாங்கண்ணி கீரையை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து சமையல் செய்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும்.
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
மூலநோய் மற்றும் மண்ணீரல் நோயை குணப்படுத்த உதவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசியல் மாற்றமா? சமூக மற்றமா? அம்பேத்கர் முன்வைக்கும் வாதம்!
தேவையற்ற செலவுகளை செய்ய வைக்கிறதா யுபிஐ செயலிகள்?
நியூஸ்கிளிக் செய்தி நிறுவனருக்கு 7 நாள் போலீஸ் காவல்!