நம்ம அண்ணன் டீக்கடைக்கு ரொம்ப நாளைக்கப்புறம் போயிருந்தோம். ’என்ன தம்பி ஆளையே காணோம் நீங்க இல்லாம ரொம்ப போரடிச்சுது தம்பி’னு மாஸ்டர் சிரிச்சாரு. எதுக்கு சிரிச்சாருனு தெரியலை.
அதுக்குள்ள நம்ம தம்பி ஒருத்தன் பேப்பரைப் பாத்துட்டு, ‘அண்ணே இங்க பாருங்கண்ணே…. அண்டார்டிகாவுல நாலு மாசத்துக்கு அப்புறம் இன்னிக்குதான் சூரியன் உதிச்சிருக்காம்’னு ஆச்சரியமா சொன்னான்.
அதுக்கு இன்னொரு தம்பி, ‘என்னாச்சுண்ணே இப்பதான் அண்டார்டிகாவுல தேர்தல் நடந்துச்சா. நம்ம ஸ்டாலின் கூட அங்க போகலையே? அப்புறம் எப்படி விடியல் வந்திருக்கும்’னு தெரியாத மாதிரியே முகத்தை வச்சிக்கிட்டு கேட்டாப்டி.
நான் அப்படியே டீய குடிச்சுட்டு வந்துட்டேனுங்க. நீங்க அப்டேட் பாருங்க….

மயக்குநன்
நிதியமைச்சர் பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாதவர் பழனிவேல் தியாகராஜன்!- வானதி சீனிவாசன்.
ஆமாமா… இதுவரைக்கும் அவர் ‘பல்துறை வித்தவர்’ பட்டம் பெறலையே..?!

balebalu
எய்ம்ஸ் மருத்துவமனை பெயர் மாற்றுகிறது மத்திய அரசு – செய்தி
‘செங்கல்’ க்கு பதிலா ‘கருங்கல் ‘ ன்னு வைப்பாங்களோ

ரஹீம் கஸ்ஸாலி
NDTV செய்தி நிறுவனத்தை வாங்குகிறது அதானி குழுமம்!
பிரதமரையே வாங்கி வச்சிருக்கும் அதானிக்கு NDTV – ஐ வாங்குவதுதா பெரிய விஷயம்? போய்யா அங்கிட்டு…

கடைநிலை ஊழியன்
மீ – பறக்க பறக்க துடிக்குதே.. பழைய ரணங்கள் மறக்குதே..
கடவுள் – அப்படி எல்லாம் நடக்க சான்ஸ் இல்லயே..

மயக்குநன்
பலருக்கு முன்னோடியாக விளங்குகிறார் பிரதமர் மோடி!- சந்திரபாபு நாயுடு.
கூட்டணிக்கு பிளான் பண்ணுற ‘தந்திர’பாபு நாயுடு..?!

balebalu
என்ஜினீயரிங் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு யோகா விருப்ப பாடம் – செய்தி
‘தலைகீழா நின்னாலும் வேலை கிடைக்கிறது கஷ்டம்’ ன்னு சிம்பாலிக்கா சொல்ல வர்றாங்க போல.

Muthusamy Muthusamy
~ ஏன் நீங்க திடீர்னு இலவசத்த குடுக்க கூடாதுனு சொல்றிங்க என்ன காரணம்?
என்ன காரணம், நீங்க மக்களுக்கு குடுக்குற இலவசத்துக்கு எங்களால ஜீஎஸ்டி போட முடியல அதான் காரணம்!

நர்சிம்
‘சரி போய்த்தொலையுது’ என்பதன் தத்துவார்த்துமான பதம்தான், பக்குவம்.

கோழியின் கிறுக்கல்!!
வீட்டில் நடக்கும் பெரும்பாலான போர்களுக்கு பென்சில், ரப்பர் தான் காரணமாக அமைந்து விடுகிறது!!


Priya Gopi
ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி…
“நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்!” என்று ஊளையிட்டது.
கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.
மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது ஆஹா… பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்..! சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.
இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த மகரயாழ் சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது… அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை..”ஆஹா நாம் வெகுவாக இளைத்து விட்டோம்.
நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?’ என்று பயந்தது.
பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..” என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.
இந்த நரியின் கற்பனை மாதிரி தான்… சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர்.
காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்;
மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம்.
இயல்பாக இருப்போம். ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம்.
வாழ்வைக் கொண்டாடுவோம்.
லாக் ஆப்
ஜாலியோ ஜிம்கானா: இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம்!