கடந்த சில நாட்களாக சாம்சங் போன்களிலும் பச்சை நிற கோடு தோன்றி பயன்பாட்டை பாதிப்பதாக பயனாளர்கள் புகார் தெரிவித்தனர். இதை சாம்சங் நிறுவனமும் ஒப்புக் கொண்டது, இவ்வாறு பிரச்சனை உள்ளவர்களுக்கு இலவசமாக டிஸ்ப்ளே மாற்றி தரப்படும் என அறிவித்தது.
ஏப்ரல் 30 ஆம் தேதி வரை முன்பதிவு செய்து இலவசமாக டிஸ்ப்ளேவை மாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இலவச பேட்டரி மற்றும் கிட் ரீப்ளேஸ்மென்ட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பிரச்சனையானது அதிக அளவில் சாம்சங் கேலக்சி எஸ்21 மற்றும் எஸ்22 சீரிஸ் போன்களில் வருகிறது என்று கடந்த வாரங்களில் பயனாளர்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து இருந்தனர்.
கடந்த ஆண்டில் சாம்சங் கேலக்சி எஸ்20 மற்றும் நோட் 20 மாடல்களுக்கு இலவச டிஸ்ப்ளே ரீப்ளேஸ்மென்ட் வழங்கி இருந்தது தற்போது இதில் எஸ்21 மற்றும் எஸ்22 மாடல்களும் இணைந்துள்ளது.
மக்கள் பெரிதும் விரும்பி வாங்கக்கூடிய சாம்சங், ஒன்ப்ளஸ் போன்ற போன்களில் இவ்வாறு பச்சை கோடு தோன்றுவதற்கு சாப்ட்வேர் பிரச்சனையா அல்லது ஹார்ட்வேர் பிரச்சனை காரணமா என இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர்.
நாம் பயன்படுத்தும் போன்களில் எந்த பிரச்சனை வந்தாலும் நாமாக எந்த முடிவிற்கும் வராமல் சேவை மையத்தை அணுகி நிரந்தர தீர்வை பெறுவதே சிறந்ததாகும்.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
ஐஏஎஸ் தேர்வு வினாத்தாள் AI மூலம் மொழிமாற்றம் – நீதிமன்றம் ஆலோசனை