ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வு வினாத்தாள்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மொழிமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 23) ஆலோசனை வழங்கியுள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை 22 மாநில மொழிகளிலும் வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலமுருகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 23) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை மாநில மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வினாத்தாள்களை மொழிமாற்றம் செய்து அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதிகாரிகள் சரிசெய்யலாம்” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Aparna Das: களைகட்டிய திருமணம்… தீயாய் பரவும் புகைப்படங்கள்!
எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தது காங்கிரஸ் : மோடி