நாளை எந்தெந்த மாவட்டங்களில் பொது விடுமுறை?: எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?

Published On:

| By Kavi

தொடர் கனமழையால் நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 19) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாகப் பெய்த கனமழை காரணமாகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளையும்(19.12.2023) பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் நாளை இயங்காது. எனினும், குடிநீர், பால், மருந்தகங்கள் மற்றும் பொதுச்சுகாதாரம் உட்பட அத்தியாவசிய துறைகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

அதுபோன்று நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

பிரியா

ஊர் திருவிழாவை கொண்டாடும் ’லால் சலாம்’ பர்ஸ்ட் சிங்கிள்!

மீண்டும் ED சம்மன்… தியானத்தில் மூழ்கும் கேஜ்ரிவால்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel