லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படம் உருவாகியுள்ளது.
3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கியுள்ள 3 வது படம் இது. லால் சலாம் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
லால் சலாம் படத்தில் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “தேர் திருவிழா” இன்று (டிசம்பர் 18) மாலை 5 மணிக்கு வெளியானது.
ஊர் திருவிழாவின் சிறப்புகளை பற்றி கூறுவது போன்ற பாடல் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.
சுமார் 7 நிமிடங்கள் உள்ள தேர் திருவிழா பாடல் லிரிகல் வீடியோவில் படத்தின் மேக்கிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
தொடர் வெள்ளம்: மோடியை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்
மீண்டும் ED சம்மன்… தியானத்தில் மூழ்கும் கேஜ்ரிவால்