tamilnadu meteorological department rains
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (ஜனவரி 8) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
ஐந்து இடங்களில் அதிகனமழையும், 17 இடங்களில் மிக கனமழையும், 55 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழக கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். தற்போதைய நிலவரப்படி இன்னும் 4 முதல் 5 நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டிரைக்: நெருங்கும் பொங்கல் – நெருக்கடி கொடுக்கும் தொழிற்சங்கத்தினர்!
TNGIM 2024 : “ஒரு வீடியோ பண்றதுக்கு ரூ.3 லட்சம் செலவாகும்” – வில்லேஜ் குக்கிங் சேனல் பேட்டி!
செந்தில் பாலாஜி வழக்கு : ED-க்கு நீதிபதி கேள்வி!
tamilnadu meteorological department rains