ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மதுரை வந்தார்.
இன்று (பிப்ரவரி 18) கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி பூஜையுடன் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாகத் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகத் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதற்காக இன்று காலை 8.30 மணிக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் 8.55 மணிக்குத் தனி விமானம் மூலமாகப் புறப்பட்டு 11.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். ஆளுநர் உடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜும் குடியரசுத் தலைவரை வரவேற்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று குடியரசுத் தலைவர் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக காரில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குடியரசுத் தலைவர் மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சன்னதிகளில் சாமி தரிசனம் செய்கிறார்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பயணிக்கும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோனிஷா
வாரிசு துணிவை ஓரம்கட்டிய “டாடா”
மீன் விற்ற விஜயகாந்த் மகன்: தண்ணீர் தூக்கி வாக்கு சேகரிப்பு!